நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ‘துரோக தினம்’ அனுசரிப்பு
Views - 225 Likes - 0 Liked
-
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்த சட்டங்களையும் கடந்த ஆண்டு திரும்ப பெற்றது. அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தை கடந்த டிசம்பர் 9ந் தேதி வாபஸ் பெற்றனர்.ஆனால் இந்த வாக்குறுதிகளை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மத்திய அரசை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் அவர்கள் துரோக தினம் அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.இது குறித்து பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் தளத்தில், ‘விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து மத்திய அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 9ந் தேதி எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால் மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசை கண்டித்து 31ந் தேதி (இன்று) நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.News