ஒடிசா ஓபன் பேட்மிண்டன்: இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று உன்னதி ஹூடா சாதனை
Views - 263 Likes - 0 Liked
-
ஒடிசா ஓபன் ‘சூப்பர் 100’ சர்வதேச பேட்மிண்டன் போட்டி கட்டாக்கில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-18, 21-11 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான சுமித் தோஷ்னிவாலை வெறும் 35 நிமிடங்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.அவருக்கு ரூ.4¼ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. இதன் மூலம் இந்த வகை பேட்மிண்டனில் குறைந்த வயதில் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை 14 வயதான அரியானாவைச் சேர்ந்த உன்னதி ஹூடா பெற்றார்.ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-15, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான பிரியன்ஷூ ரஜவாத்தை போராடி வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-10 என்ற நேர் செட்டில் சக நாட்டு இணையான சன்யோகிதா-ஸ்ருதி மிஷ்ராவை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தியது.News