ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 24 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து
Views - 241 Likes - 0 Liked
-
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 24 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் சற்று நேரம் தாமதமாக தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் தாமஸ் (50 ரன்) அரைசதம் விளாசினாலும், அவருடன் இணைந்த வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 35.1 ஓவர்களில் 136 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னதாக 30-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டதால் போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.News