உக்ரைன்- ரஷியா போர் எதிரொலி; பெலாரஸ் உடனான கால்பந்து போட்டியை ரத்து செய்தது இந்திய அணி
Views - 208 Likes - 0 Liked
-
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இதனால் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு , பிபா , சர்வதேச தடகள கூட்டமைப்பு ஏற்கனவே ரஷியா , பெலாரஸ் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.இந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டுயிருந்த பெலாரஸ் உடனான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை இந்திய ஆண்கள் அணி ரத்து செய்துள்ளது.இது குறித்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது :சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலின் பெயரில் பெலாரஸ் உடனான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை நாங்கள் ரத்து செய்கிறோம். அதே நேரத்தில் இந்த போட்டி ரத்து செய்யபட்டதால் பஹ்ரைன் அணியுடன் 2 போட்டிகளில் விளையாட முயற்சி செய்து வருகிறோம்.News