தமிழகத்திலேயே முதன் முதலாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Views - 224 Likes - 0 Liked
-
தமிழகத்திலேயே முதன் முதலாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் மின் நிலையத்தை தொடங்கி வைத்தார். 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் ரூ.150.4 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ஆகியோர் உடனிருந்தனர்.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள மாணிக்கம் மகால் திருமண மண்டபத்தில் சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கான (அறைகலன் பூங்கா) அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த சர்வதேச பர்னிச்சர் பூங்கா நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிடுகிறார்.News