#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் மீது ரஷியா போர் 24-வது நாள் - ரஷியாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஜெலன்ஸ்கி
Views - 209 Likes - 0 Liked
-
உக்ரைன் மீது ரஷியா 24-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-மார்ச் 19, 6.00 amதீவிரமான பேச்சுவார்த்தை:-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ரஷியாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்துவிட்டது என்றார். நான் கூறுவதை அனைவரும் கேட்கவேண்டும். குறிப்பாக மாஸ்கோ. சந்திப்பு மற்றும் தீவிர பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்துவிட்டது என ஜெலன்ஸ்கி கூறினார்.மார்ச் 19, 3.15 amரஷியாவின் தாக்குதலில் கடுமையான பாதிக்கப்பட்ட உக்ரைனின் சுமி நகருக்கு ஐநா சார்பில் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் வந்தடைந்துள்ளன.மார்ச் 19, 2.52 amஉக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷியாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனா உதவி செய்தால் இது உலக நாடுகளுடனான உறவை மேம்படுத்த உதவும்’ என்றார்.மார்ச் 19, 2.45 amரஷியா வீசிய வெண்டுகுண்டுகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் வெடிக்காமல் சிதறிக்கிடக்கின்றன. இந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்ய சில ஆண்டுகள் ஆகலாம் என உக்ரைன் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.மார்ச் 19, 2.14 amரஷியா நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஷபுர்ஷஷயா அனுமின்நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அனுமின்நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கையை உக்ரைன் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.மார்ச் 19, 2.12 amஉக்ரைன் - ரஷியா இடையேயான போர் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பைடன் எச்சரித்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் சீனா எத்தகைய விளைவுகளை சந்திக்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.மார்ச் 19. 2.09 amஉக்ரைனில் இருந்து நேற்று ஒரேநாளில் 9 ஆயிரத்து 145 பேர் வெளியேறியுள்ளனர். ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள மரியபோல் நகரில் இருந்து மட்டும் நேற்று 4 ஆயிரத்து 972 பேர் வெளியேறி உள்ளனர்.மார்ச் 19, 2.00 amஉக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெலாரஸ் மீதும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக பெலாரஸ் நாட்டில் கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், பெலாரசுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது.மார்ச் 19, 1.53 amஅமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்க்கு ஆயுத உதவிகளை வழங்கினால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என சீன அதிபரிடம் அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்தார்.News