‘எனது சிறந்த செயல்பாடு இன்னும் வெளிப்படவில்லை’: நீரஜ் சோப்ரா பேட்டி
Views - 250 Likes - 0 Liked
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-இதுவரை குவித்த வெற்றிகள், சாதனைகளை எல்லாம் எனது சிறந்த செயல்பாடு கிடையாது என்று தான் நான் எப்போதும் நினைப்பேன். எதிர்காலத்தில், உண்மையிலேயே இன்னும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். ஒட்டுமொத்த தேசமும் என் மீது நம்பிக்கை வைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது.90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிய வேண்டும் என்று நீண்ட காலம் முயற்சித்து வருகிறேன். விரைவில் இந்த இலக்கை எட்டுவேன் என்று நம்புகிறேன். 90 மீட்டர் எறிய வேண்டும் என்பதில் எனக்கு நெருக்கடி எதுவும் இல்லை. வேகத்துடன் எனது தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கம், எனது வாழ்க்கையில் இதைவிட மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை தந்திருக்கிறது. ஜூலை மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கமேடையில் ஏற வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு. இதே போல் இந்த ஆண்டில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் டைமண்ட லீக் ஆகிய பெரிய போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வேண்டும்.இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.24 வயதான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.News