#லைவ் அப்டேட்ஸ்: இழந்த பகுதிகளை மீட்க உக்ரைன் படைகள் தீவிரம்..!!
Views - 206 Likes - 0 Liked
-
உக்ரைன் மீது ரஷியா 29- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-மார்ச் 24, 04.10பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட் தனது மாஸ்கோ தொழிற்சாலையின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தது.மார்ச் 24, 03.11சோர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள காடு ஒன்று தீப்பற்றி எரிந்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்ததாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மார்ச் 24, 02.20உக்ரைன் தலைநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷிய நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் அந்நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.மார்ச் 24, 01.05உக்ரைனில் முழு அளவிலான ரஷியாவின் போர் நடவடிக்கையால் கார்கிவ் நகரில் இதுவரை 1,143 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில மேயர் இகோர் தேரேகோவ் (Ihor Terekhov) தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கார்கிவ் மேயர் இகோர் தேரேகோவ், ரஷியப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில் 1,143 கட்டிடங்களை அழித்தன, அவற்றில் 998 குடியிருப்பு கட்டிடங்கள் அடங்கும் என்று தெரிவித்தார்.மார்ச் 24, 12.10உக்ரைனில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய ரஷிய போரால், 1 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் போரில் கொன்று குவிக்கப்பட்டிருப்பது அந்த நாட்டின் துயரமாக மாறி உள்ளது.உக்ரைன் தலைநகரான கீவ் நகர் மீது நேற்று ரஷிய படைகள் நடத்திய குண்டுவெடிப்புகள், அந்த நகரை குலுங்க வைத்தது. வடமேற்கில் இருந்து பீரங்கி தாக்குதல், தொடர்ந்து நடத்தப்பட்டது. துப்பாக்கி சண்டைகளும் கீவ் நகரில் இடைவிடாமல் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.புறநகரான புச்சா, ஹோஸ்டமெல், இர்பின் ஆகிய நகரங்களில் குறிப்பிட்ட பகுதிகளை ரஷியப்படைகள் தங்கள் வசப்படுத்தின.ரஷிய படைகள் கைப்பற்றிய இடங்களை மீட்பதற்காக உக்ரைன் படைகள் தீரமுடன் சண்டையிடுகின்றன. இதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நிருபர்களிடம் உறுதி செய்தார்.கீவ் நகரின் புறநகரான மகாரிவ்வை ரஷியப்படைகளிடம் இருந்து மீட்டுள்ள உக்ரைன் படைகள், அங்கு உக்ரைன் கொடிகளை நேற்று பறக்கவிட்டுள்ளன.மேலும் விவசாய நகரமான வோஸ்னென்ஸ்க் நகரில் ரஷியப்படைகளை உக்ரைன் படைகள் பின்னுக்கு தள்ளி உள்ளன. இது ரஷியாவுக்கு கிடைத்துள்ள அடியாக பார்க்கப்படுகிறது.ரஷிய படைகள், உணவு, எரிபொருள், வெப்பக்கருவி ஆகியவற்றின் கடுமையான தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.பூமியின் நரகமாக மாறியுள்ள மரியுபோல் நகரை நினைத்தபடி எளிதான வகையில் கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் திணறி வருகின்றன. உக்ரைன் படைகள், அவர்களின் முயற்சிக்கு மாபெரும் தடைச்சுவராக நின்று பதில் தாக்குதல் தொடுத்து வருகின்றன.இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி உள்ளனர். ஆனாலும் இன்னும் 1 லட்சம் மக்கள் இங்கு சிக்கித்தவிப்பதாக தெரிய வந்துள்ளது. மின்சாரம், உணவு, தண்ணீர் கிடையாது. தகவல் பரிமாற்றம் இல்லை. மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் கூடிய தங்களது வாகனங்கள், மரியுபோல் நகருக்கு நுழைய முடியவில்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.அசோவ் கடலில் ரஷிய கப்பல்கள், மரியுபோல் நகர ஏவுகணை தாக்குதலில் இணைந்துள்ளன. அங்கு மொத்த 7 ரஷிய போர் கப்பல்கள் முற்றுகையிட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.செர்னோபில் அணு மின் நிலையத்தில் இருந்த ஒரு ஆய்வு கூடத்தை ரஷிய படைகள் அழித்தன.இதற்கிடையே உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க ரஷியா மறுத்துவிட்டது.இதுபற்றி ரஷிய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, “இது ஏற்கனவே இருந்து வருகிற அச்சுறுத்தல் என்றால், அது அப்படியே இருக்கலாம்” என தெரிவித்தார். இது உக்ரைன் மீதான ரஷியாவின் அணு ஆயுத மிரட்டலாக பார்க்கப்படுகிறது.இதற்கிடையே உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினார். ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான சமரச பேச்சு வார்த்தை உள்ளிட்ட அம்சங்கள் பேச்சு வார்த்தையில் இடம் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்ற ரஷியாவின் முக்கிய கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.News