ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி; 350 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
Views - 239 Likes - 0 Liked
-
ஈரோடு
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 350 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
சிலம்பாட்ட போட்டி
ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஈரோடு யு.ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிக்கு மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.கந்தவேல் முன்னிலை வகித்தார்.யு.ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட தாளாளர் சரஸ்வதி கனகசபாபதி, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சக்திகணேஷ், தீபா, சக்தி மசாலா நிறுவன பொறுப்பாளர் செந்தில்குமார், தீபா ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
350 மாணவ-மாணவிகள்
இந்த போட்டியில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள். இதில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக தனித்திறன் போட்டிகளாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 350 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டார்கள்.
இதில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.News