நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் கதையை கசியவிட்ட அமெரிக்க திரையரங்கு...!
Views - 228 Likes - 0 Liked
-
பீஸ்ட்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 13 ஆம் தேதி வெளியாகிறது.இந்த நிலையில் இந்தப் படத்தின் இந்தி டிரெய்லர் வெளியாகியுள்ளது.இந்தி டிரெய்லரை பகிர்ந்த நடிகர் வருண் தவான், பீஸ்ட் இந்தி டிரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.எப்பொழுதும் நான் விஜய் சாரின் பெரிய ரசிகன் எனக் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறதுஇந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படக் கதையை பகிர்ந்துள்ளது.அதில் நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.News