பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சு தேர்வு
Views - 203 Likes - 0 Liked
-
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (திங்கட்கிழமை) நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.News