ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Views - 215 Likes - 0 Liked
-
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, தாய்லாந்தின் அபிலுக் காடெரா ஹாங்-நாட்சனோன் துலாமோக் இணையை எதிர்கொண்டது.27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.அடுத்த ஆட்டத்தில் சாத்விக் -சிராக் ஷெட்டி ஜோடி ஜப்பானின் அகிரோ கோகா- தாய்சி சாய்டோ இணையை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத்-விஷ்ணுவர்தன் கவுட் பன்ஜலா ஜோடி 10-21, 21-19, 16-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் காங் மின்யுக்- கிம் வோன்ஹோ இணையிடம் தோல்வி அடைந்தது.கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் இஷான் பத்நா கர்-தனிஷா கிரஸ்டோ இணை 21-15, 21-17 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் லா செக்-யுங் நா டிங் ஜோடியை தோற்க டித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.News