" “If opportunity doesn't knock, build a door.”"

போலீஸ் அணி சாம்பியன்

Views - 252     Likes - 0     Liked


  • நட்புறவு கிரிக்கெட் போட்டியில் போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
    நட்புறவு கிரிக்கெட் போட்டி
    கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் நட்புறவு கிரிக்கெட் போட்டி கேப் மைதானத்தில் நடந்தது. இதில் காவல் துறை அணி, ஐ.ஆர்.பி.என். காவல் துறை அணி, புதுச்சேரி வக்கீல்கள் தலைவர் மற்றும் செயலாளர் அணி, தீயணைப்பு துறை அணி ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
    லீக் போட்டிகளின் முடிவில் போலீஸ் அணி 16 புள்ளிகள் பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. ஐ.ஆர்.பி.என். காவல்துறை அணி, தீயணைப்பத்துறை      அணி, வக்கீல்கள் தலைவர்  அணி ஆகியவை தலா 8 புள்ளிகள் பெற்றன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் ஐ.ஆர்.பி.என். காவல் துறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
    போலீஸ் அணி சாம்பியன்
    இதைத்தொடர்ந்து இன்று நடந்த இறுதி போட்டியில் காவல்துறை அணியும், ஐ.ஆர்.பி.என். காவல்துறை அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த போலீஸ் அணி 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்து மலைக்க வைத்தது. அந்த அணியை சேர்ந்த வீரர் சபரி 68 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார்.
    கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஐ.ஆர்.பி.என். காவல்துறை அணி 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் போலீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 
    பரிசளிப்பு
    இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி கவுரவ செயலாளர் சந்திரன், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஆரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினர்.
    சிறந்து பவுலருக்கான விருது ஐ.ஆர்.பி.என்.காவல்துறை அணியை சேர்ந்த இளங்கோவுக்கும், ஆல் ரவுண்டருக்கான விருது தீயணைப்புத்துறையை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கும், ஆட்டநாயகன் விருது போலீஸ் அணியை சேர்ந்த சபரிக்கும் வழங்கப்பட்டன.
    இறுதி போட்டியில் கலந்து கொண்ட 2 அணிகளுக்கும் மற்றும் நடுவர்களுக்கும் சாலை விழிப்புணர்வை குறிக்கும் வகையில் ஹெல்மெட்டு வழங்கப்பட்டது.
    News