சென்னை விமான நிலையத்தில் மின்சார செலவை குறைக்க புதிய ஏற்பாடு
Views - 227 Likes - 0 Liked
-
விமான பயணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் கூடுதலாக கிடைக்கும் வகையில், மின்சார செலவை குறைக்கும் வகையிலும் சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அதிநவீன 'ஸ்கைலைட் சிஸ்டம்' என்ற முனையத்திற்குள் அதிக அளவு சூரிய வெளிச்சம் நேரடியாக வருவதற்கான பிரத்யேக வடிவமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. சூரிய வெளிச்சம் நேரடியாக விமானநிலையத்தின் உள்பகுதிக்கு வருவது போல், ஆறு மீட்டர் அளவில் வட்ட வடிவில், 10-க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், 2023 தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் வகையில், சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
News