ஸ்கூட்டியின் விலை ரூ.8 லட்சம்.. அப்போ ஒரு காரோட விலை..! - அதிர்ந்து போன இலங்கை பொதுமக்கள்
Views - 221 Likes - 0 Liked
-
இலங்கையில் சாதாரண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னணி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி அங்கு புதிய வாகனங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முன்னணி கார்களின் விலையும் 60 முதல் 90 லட்சம் வரை விலை அதிகரித்துள்ளது. வாகன இறக்குமதி குறைவால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பண வீக்கமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News