அமொிக்காவில் உள்ள இந்திய ஓட்டலுக்கு விருது
Views - 221 Likes - 0 Liked
-
சிகாகோவை சோ்ந்த ஜேம்ஸ் பியா்ட் என்ற அறக்கட்டளை, ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சிறந்த ஓட்டல், சிறந்த சமையல்காரர், சிறந்த புதிய ஓட்டல், வளர்ந்து வரும் சமையல்காரர் உள்ளிட்ட பல பிாிவுகளில் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான சிறந்த ஓட்டலுக்கான விருதை இந்திய ஓட்டலான சாய் பானி ஓட்டல் பெற்றுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவுகளை மக்களுக்கு வழங்குவதாகவும் அந்த அறக்கட்டளை பாரட்டு தொிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News