" “If opportunity doesn't knock, build a door.”"

சுந்தர் சி, ஜெய் நடிப்பில் குலை நடுங்க வைக்கும் சைக்கோ-திரில்லர் 'பட்டாம்பூச்சி' -

Views - 214     Likes - 0     Liked


  • அவ்னி டெல்லி மீடியா சார்பில் குஷ்பு தயாரிப்பில் பத்ரி எழுதி இயக்கியுள்ள படம் 'பட்டாம்பூச்சி'. இதில் சுந்தர் சி, ஜெய், அனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானசா உள்பட பலர் நடித்துள்ளனர். சைக்கோ-திரில்லர் படமாக உருவாகியுள்ள 'பட்டாம்பூச்சி' வருகிற 24-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதுகுறித்து 'பட்டாம்பூச்சி' படத்தின் டைரக்டர் பத்ரி கூறியதாவது:- தமிழ் சினிமாவிலேயே இதுவரை காட்டப்படாத வித்தியாசமான கதைக்களத்தில் சைக்கோ திரில்லர் படமாக 'பட்டாம்பூச்சி' உருவாகியுள்ளது. இதில் கொடூர சைக்கோவாக ஜெய்யும், நேர்மையான போலீஸ் அதிகாரியாக சுந்தர் சியும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சைக்கோ வில்லனாக ஜெய் மிரட்டியுள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்படாத பயங்கரமான வன்முறை காட்சிகள் இந்த படத்தில் உள்ளன. இந்த படத்தின் பெரும்பலம் கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும், நவநீத் சுந்தரின் இசையும் தான். ராஜசேகரின் சண்டைக்காட்சிகளும் படத்துக்கு வலு சேர்க்கின்றன. அடுத்து என்ன ஆகுமோ? என்ற எதிர்பார்ப்புடன் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு படு பயங்கரமான ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம். கதையின் தன்மைக்காக இந்த வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சைக்கோ த்ரில்லர் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் மாபெரும் விருந்து எனலாம். தியேட்டரை விட்டு வீடு திரும்பிய பின்னரும் ஒரு வித பயமும், நடுக்கமும் நம் மனதில் இருக்கும். Also Read - அனைத்தும் ஒரே இடத்தில்!! தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி இந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து இருப்பதால் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது. சைக்கோ கொலைகாரன் எப்படி தனது மதிநுட்பத்தை பயன்படுத்தி தப்பிக்கிறான்? அவனைப் பிடிக்க திட்டம் போடும் போலீஸ் அதிகாரியின் முயற்சி பலித்ததா? என்பதை எதிர்பார்ப்பு நிறைந்த திருப்பங்களாக சொல்லி உள்ளோம். இந்த படம் வருகிற 24-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கொடூர சைக்கோ கொலைகாரனை பற்றிய இந்த படத்துக்கு 'பட்டாம்பூச்சி' என்று மென்மையான பெயர் வைத்திருப்பதன் காரணம் இந்த படத்தை பார்த்தபின்பு புரியும். குலை நடுங்க வைக்கும் இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் புதிய அடையாளமாக இருக்கும், என்று 'பட்டாம்பூச்சி' டைரக்டர் பத்ரி தெரிவித்தார். முன்னோட்டம் : சைக்கோ-திரில்லர் படமாக, 'பட்டாம்பூச்சி'

    News