அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு 'ஐகோர்ட்டே விசாரிக்கும்' - திருப்பி அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு
Views - 193 Likes - 0 Liked
-
அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பு முறையிட்டது. இதற்கிடையே இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதற்குத் தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்தவில்லை என்றால் சுப்ரீம்கோர்ட்டு தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் பரிசீலிக்க முடியுமே தவிர ஐகோர்ட்டு அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் சார்பில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. Also Read - கர்நாடகாவில் கனமழை: மங்களூரு நகரில் இன்று விடுமுறை அறிவிப்பு அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாகத் தனது மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பிலிம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் முக்கியமான பல- விதிகள் மீறப்பட்டுள்ளன. என்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளது, என்று கூறப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மனுவை சென்னை ஐகோர்ட்டே விசாரிக்கட்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஜூலை 11 பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ர்ட்டு புதிதாக விசாரிக்கட்டும். சுப்ரீம் கோர்ட்டு இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் ஐகோர்ட்டு விசாரணையை பாதிக்க கூடாது. அதிகபட்சம் 3 வாரத்திற்குள் இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடரட்டும். இதில் நாங்கள் கருத்து சொல்ல போவதில்லை, என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. சமரசம் செய்ய வாய்ப்பில்லை - ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் மீண்டும் இணையவாய்ப்பு உள்ளதா சமரசம் செய்து கொள்ள தயாரா என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம தரப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News