செஸ் ஒலிம்பியாட் - பிரமாண்டமாக நிறைவு விழா நடத்த அரசு திட்டம்
Views - 197 Likes - 0 Liked
-
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.இந்தப் போட்டி ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்க இருக்கிறது இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஆகஸ்ட் 9ல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நிறைவு விழா நிகழ்ச்சியை ஒடிடி தளத்தில் வெளியிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
News