மாநில பீச் வாலிபால் போட்டி நாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம்
Views - 221 Likes - 0 Liked
-
நாகப்பட்டினம் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில சீனியர் மற்றும் பள்ளி அணிகளுக்கான ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பீச் வாலிபால் போட்டி நாகப்பட்டினத்தில் உள்ள நியூ பீச்சில் நாளை (வியாழக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. மின்னொளி வசதி கொண்ட 8 ஆடுகளங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதன் சீனியர் ஆண்கள் பிரிவில் 46 அணிகளும், பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஜூனியர் ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்கின்றன. இந்த தகவலை தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.
News