20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய அணி வரும் 6-ந்தேதி ஆஸ்திரேலியா பயணம்
Views - 243 Likes - 0 Liked
-
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்நிலையில் டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அங்கு பெர்த் மைதானத்தில் 13-ந்தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
News