டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!
Views - 237 Likes - 0 Liked
-
அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.82.33ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. முந்தைய அமர்வில் ரூபாயின் மதிப்பு ரூ.81.88 ஆக இருந்தது. கடந்த ஒரு வார காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News