மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
Views - 266 Likes - 0 Liked
-
வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் இன்று சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி, தனது முதல் மூன்று லீக் போட்டியில் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வீழ்த்தியது. முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா, வங்கதேச அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி நேற்று நடந்த தாய்லாந்துக்குஎதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராடுவர். இந்திய அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர போராடும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
News