தேசிய விளையாட்டுப் போட்டி: டிரையத்லானில் தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்
Views - 268 Likes - 0 Liked
-
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய போட்டிகள் அடங்கிய டிரையத்லானில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை எஸ்.ஆர்த்தியும், சைக்கிளிங் பந்தயத்தில் 119 கிலோமீட்டர் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநாத் லட்சுமிகாந்தும் வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினர். பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் 51 தங்கம் உள்பட 113 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு 22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என்று 67 பதக்கங்களுடன் 5-வது இடம் வகிக்கிறது.
News