உலகக் கோப்பையை வெல்லும் உறுதியுடன் இந்திய ஆக்கி அணி உள்ளது- முன்னாள் வீரர் நம்பிக்கை
Views - 379 Likes - 0 Liked
-
ஆக்கி உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஏ,பி,சி,டி என 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்திய அணி 'டி' பிரிவில் ஸ்பெயின்,வேல்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளோடு இடம் பெற்றுள்ளது இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்திய அணியின் 1973 வீரர் சார்லஸ் கொர்னேலியஸ் பேசியுள்ளார். இவர் 1972 ஆம் நடந்த ஆக்கி உலக கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தவர். இந்திய ஆக்கி அணி குறித்து அவர் பேசுகையில், " கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய ஆக்கி அணி நன்கு முன்னேறியுள்ளது. இன்று, இந்திய அணி உலகின் முன்னணி அணிகளையும் வீழ்த்தி அவர்களுக்கு சவால் அளித்து வருகிறது. தற்போது இந்திய அணி நன்கு உலக கோப்பைக்கு தயாராக உள்ளது. அவர்கள் தங்கள் திறமைகளில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். Also Read - உலகக்கோப்பை ஹாக்கி : சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் பேட்டி இந்தியாவில் ஆக்கி மிகவும் சிறப்பான முறையில் முன்னேறி வந்துள்ளது. இதற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்த வீரர்களையும் பயிற்சியாளர்களையும் பாராட்ட வேண்டும். இன்று இளம் வீரர்களுக்கு தைரியமும், வெற்றிக்கான உறுதியும் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேறும் தைரியம், தரம், உறுதி அனைத்தும் இந்திய அணிக்கு உள்ளது. அதன்பிறகு அதிர்ஷ்டத்தைப் பொறுத்து நான்கு அணிகளில் எந்த அணியும் வெற்றி பெறலாம். ஆனால், இந்த இந்திய அணி அனைத்து வழிகளிலும் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் கோப்பையை வெல்லும் உறுதியுடன் இருப்பதாக நான் நம்புகிறேன்" என்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, தற்போது எப்.ஐ.எச் தரவரிசையில் உலகின் நம்பர் 5-வது அணியாக உள்ளது. இங்கிலாந்து (6-வது இடம்), ஸ்பெயின் (8-வது இடம்) மற்றும் உலகக் கோப்பையில் அறிமுக அணியான வேல்ஸ் (16-வது இடம்) ஆகிய அணிகள் இந்திய அணியின் குரூப்பில் இடம்பெற்றுள்ளது. 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகக் கோப்பை ஆக்கியில் இந்தியா தற்போது வரை மூன்று பதக்கங்களை மட்டுமே (1971- வெண்கலம், 1973 இல் வெள்ளி மற்றும் 1975 இல் தங்கம்) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News