வங்காளதேசத்தில் 'சிட்ரங் புயல்' கரையை கடந்தது
Views - 478 Likes - 0 Liked
-
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காளதேசத்தில் கரையை கடந்துள்ளது.எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே 'சிட்ரங்' புயல் கரையை கடந்தது.புயல் கரையை கடந்ததில் வங்காளதேசத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் 4 வட கிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News